உள்நாடு

கொழும்பை வந்தடைந்த SILVER DAWN பயணிகள் அதி சொகுசு கப்பல்

பயணிகள் அதி சொகுசு கப்பலான சுமார் 700 அடி நீளமுடைய SILVER DAWN பயணிகள் கப்பல் நேற்று காலை (10) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

சுமார் 800 இற்கு மேற்பட்ட பயணிகளுடன் வந்தடைந்த SILVER DAWN கப்பலின் இலங்கைக்கான இயக்க முகவர் Colombo Shipping Solutions Pvt Ltd. நிறுவனமாகும்.

07ம் திகதி திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த இந்த பயணிகள் சொகுசு கப்பல் நேற்று முன்தினம் (09) காலி துறைமுகத்தில் தரித்து நின்றது.

நான்கு நாட்கள் இலங்கையில் தரித்து நிற்கும் SILVER DAWN கப்பலானது அதிகாலை இலங்கையிலிருந்து புறப்படமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *