உள்நாடு

ஐ.ம. சக்தியின் தவிசாளராக கபீர் ஹாசிம் நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய தவிசாளராக, கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வின் போது, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது, அவருக்கான நியமன கடிதமும் வழங்கி வைக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் இந்த நிகழ்வில் பங்கேற்றினார்.

கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான தேர்தல் வியூகங்களை வலுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *