பிற்பகல் வேளையில் மழை பெய்யலாம்
மேல், சபரகமுவ, வடமேல், தென், ஊவா மாகாணங்களிலும் அநுராதபுரம், மன்னார், கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம்.
மேலும் ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கின்றது.
இதற்கமைய இன்று (11) நண்பகல் 12:11 மணியளவில் பொம்பரிப்பு, அநுராதபுரம், மிகிந்தலை, கலன்பிந்துனுவெவ, அக்போபுர மற்றும் சேருநுவர ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
