உள்நாடு

சீனன்கோட்டை பிடவலை ஸாவியாவில் ஹிஸ்புல் குர்ஆன் மஜ்லிஸில் பங்குபற்றியோருக்கு பணப் பரிசில்கள்

பேருவளை சீனன் கோட்டை பிடவலை அல் மிர்அதுஷ் ஷாதுலிய்யா ஸாவியாவில் புனித ரமழான் மாதம் இரவு நேரத்தில் 30 நாட்கள் நடைபெற்ற ஹிஸ்புல் குர்ஆன் மஜ்லிஸில் பங்குபற்றிய சிறார்களுக்கு பணப் பரிசில் வழங்கும் வைபவம் மேற்படி ஸாவியாவில் சிறப்பாக நடைபெற்றது.

சீனன் கோட்டைப் பள்ளிச்சங்கத் தலைவரும் ஜாமியா நளீமியா கலாபீட உப தலைவருமான ஏ.எச்.எம். முக்தார் ஹாஜியார், மேற்படி ஸாவியாவின் உபகுழுவின் வழிகாட்டலின் கீழ் ஹிஸ்புல் குர்ஆன் மஜ்லிஸ் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

பிரதேசத்தைச் சேர்ந்த 29 மாணவர்கள் இம் மஜ்லிஸில் பங்குபற்றினர். ஸாவியாவில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில்சீனன் கோட்டைப் பள்ளிச்சங்க இணைச் செயலாளர்களான அல் ஹாஜ் எம்.எம்.எம் ஷிஹாப், கலீபதுச் சாதுலி அஸ்செய்க் இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நளீமி), அல்ஹாஜ் ரம்லான் அரூஸ், உப தலைவர் அல்ஹாஜ் எம். ஸப்வான் நயீம், உறுப்பினர் அல் ஹாஜ் இஸ்ஸத் ஸவாஹிர் உட்பட பல பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த மாணவர்களை மேலும் உட்சாகப்படுத்தும் வகையில் கங்கானம்கொடை கிரீடா புட்ஸல் மைதானத்தில் கிரிக்கெட் சுற்றுப் போட்டியொன்றும் இடம் பெற்றதோடு பங்குபற்றிய சிறார்களுக்கும் பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டமை இற்கு குறிப்பிடத்தக்கது.

(பேருவளை : பீ. எம். முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *