சுமார் 60 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக கொழும்பு மத்திய இ.போ.ச. பஸ் நிலையம் புதிய பொலிவுடன் திறப்பு
கொழும்பு மா நகரத்தின் முக்கிய போக்குவரத்து மையமான மத்திய இ.போ.ச. பஸ் நிலையம், நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டு, இன்று (ஏப்ரல் 8) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இதில் பல நவீன புதிய வசதிகள் அமையப் பெற்றுள்ளதாக, மத்திய இ.போ.ச. பஸ் நிலையம் தெரிவித்துள்ளது.
சுமார் 424 மில்லியன் ரூபா முதலீட்டில் நவீனமயமாக்கப்பட்டுள்ள இந்த இ.போ.ச. பஸ் நிலையத்தில், பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கான மேம்படுத்தப்பட்ட வசதிகள், சுத்தமான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து சூழல், நிர்வாகக் கட்டமைப்பில் டிஜிட்டல் வசதிகள் என்பன அமையப்பெற்றுள்ளன.
சுமார் 60 ஆண்டுகால வரலாற்றில் முதன் முறையாக, இலங்கை விமானப் படையின் பங்களிப்புடன் முழுமையாக, இந்த மத்திய இ.போ.ச. பஸ் நிலையம் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





( ஐ. ஏ. காதிர் கான் )
