இரு வார யுத்த நிறுத்தம் இன்று முதல் அமுல்; வெள்ளியன்று இஸ்லாமாபாத்தில் அமைதிப் பேச்சு
அமெரிக்க ஈரான் மோதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபா ஸ் ஷெரீபின் மத்தியஸ்தத்தையடுத்து இரண்டு வாரங்களுக்கு மோதலை நிறுத்த இரே தரப்பும் உடன்பாட்டுக்கு வந்துள்ளன.
இதனடிப்படையில் இதனை மேலும் முன்னெடுத்துச் செல்லும் வகையில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத்தில் மோதல் தவிர்ப்பு பேச்சுக்களை நடாத்துவதற்கும் இரு நாடுகளும் உடன்பாட்டுக்கு வந்துள்மை குறிப்பிடத்தக்கது.
