உள்நாடு

வெல்லம்பிட்டி எஸ்.கே. குயின் கம்பஸின் பட்டமளிப்பு விழா

வெல்லம்பிட்டியில் அமையப்பெற்றுள்ள SK Queen Campus சின் முதலாவது டிப்ளோமா பட்டமளிப்பு நிகழ்வு நேற்று முன்தினம் திங்கட்கிழமை 06.04.2026 பண்டாரநாயக்க ஞாபகாார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எஸ்,கே. குயின் கெம்பஸ் தலைவி கலாநிதி சப்னா சிபான் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஹாசிம் உமர் பவுண்டேசனின் செயலாளர் திருமதி மரியம் ஹாசிம் உமர் கலந்து கொண்டு விருதுகளையும், வெற்றிப் பதங்கங்கள், மற்றும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.

பாடசாலைக் கல்வியை முடித்த வீடுகளில் தங்கியிருக்கும் இளம் யுவதிகள் 50 பேர் எஸ்,கே. கெம்பஸ் ஊடாக ஒரு வருடம், ஆறு மாதங்கள், மூன்று மாத கால அழகுக் கலைத்துறை , மணப்பெண் அலங்காரம், உடை வடிவமைப்பு (பெஷன்) ஆடை அலங்காரம். ஆகிய துறைகளில் டிப்ளோமா பயிற்சி நெறிகள் வெற்றிகரமாக முடித்த இளம் யுவதிகளுக்கு பட்டம வழங்கி வைக்கப்பட்டது.

இப் பயிற்சி நெறிகள் பயின்ற யுவதிகள் யாழ்ப்பாணம், கண்டி, நுவரெலியா, கொழும்பு போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர்.
கொழும்பு வெள்ளம் பிட்டியில் உள்ள இவ் எஸ்,கே. கெம்பஸ் ஊடாக இப் பயிற்சி நெறிகள் பயின்று முடித்த யுவதிகளின் மணப்பெண் ஆடை அலங்காரம் மற்றும் வடிவமைப்பு துறையில் செயல் முறைப் பயிற்சிகள் சித்தியடைந்த யுவதிகள் முறையே முதலாம் , இரண்டாம் , மூன்றாம் இடங்கள் பெற்றவர்களுக்கு விசேட பரிசுகள், சான்றிதழ் பதக்கங்கள் மற்றும் டிப்ளோமா பட்டங்களும் பிரதம அதிதி மரியம் ஹாசிம் உமர் மற்றும் எஸ்,கே.குயின் பிரைவேட் லிமிடெட் பணிப்பாளர் எம்.சிபாஷ் மற்றும் கௌரவ அதிதி ஹமீத் நிசார் ஆகியோர்களி னால் வழங்கபட்டது

இந் நிகழ்வில் ஊடகவியலாளர்கள், பெற்றோர்கள், போதனாசிரியர்கள் கலந்து கொண்டதுடன் அதிதிகளுக்கு இக் கெம்பஸ் தலைவியின் விசேட நினைவு சின்ன விருதுகள் வழங்கி வைத்து இங்கு குறிப்பிடத்தக்கது.

(அஷ்ரப் ஏ சமத்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *