கற்பிட்டி பிரதேசத்தின் முதலாவது சட்டத்தரணி சப்ரி மொஹமட் காலமானார்

கற்பிட்டி பிரதேசத்தின் முதலாவது சட்டத்தரணி சப்ரி மொஹமட் செவ்வாய்க்கிழமை (07) மாலை ஏற்பட்ட தீடீர் மாரடைப்பு காரணமாக கற்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் காலமானார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் புதன்கிழமை (08) காலை 9 மணியளவில் கற்பிட்டி முஹைதீன் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் புத்தளம் மாவட்ட நீதிமன்றத்நின் நீதிபதி மற்றும் சட்டத்தரணிகள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்
குறிஞ்சிப்பிட்டியை பிறப்பிடமாகவும் கற்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சட்டத்தரணி சப்ரி மொஹமட் காலஞ்சென்ற சேகு அலாவுதீன் (ஆசிரியர்), வசீலா பீவி ஆகியோரின் மகனும் , சபினஸ் பேஹமின் கணவரும், வைத்தியர் சப்ராஸ், சட்டத்தரணி சப்னி, ஆசிரியை சராபா ஆகியோரின் தந்தையுமாவார்.
காலஞ்சென்ற சட்டத்தரணி சப்ரி மொஹமட் ஆரம்பத்தில் ஆசிரியராக பலவருடங்கள் சேவையாற்றி பின்னர் சட்டத்தரணியாக சேவையாற்றியதுடன் அண்மைக்காலமாக புத்தளம் நீதிமன்றத்தில் பதில் நீதிபதியாகவும் கடமை புரிந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
