உள்நாடு

உயர்தரப் பெறுபேற்றில் மன்னார் கொண்டச்சி மாணவி இமாமுதீன் சஸ்னா சாதனை

இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் 2026.04.01 ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி, மன்னார் கொண்டச்சி முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி இமாமுதீன் சஸ்னா 3ஏ திறமைச் சித்திகளுடன், மாவட்டத்தில் 9 ஆவது இடத்தையும், தேசிய மட்டத்தில் 905 ஆம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இம்மாணவி, கலைப்பிரிவில் புவியியல், அரசியல், தமிழ் ஆகிய பாடங்களில் 3 ஏ திறமைச் சித்திகளைப் பெற்று பல்கலைக் கழகத்திற்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பையும் பெற்று, மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளதாக, வித்தியாலய அதிபர் தெரிவித்துள்ளார்.

இத்தகைய சாதனையை நிகழ்த்திய இம்மாணவியை ஊக்கப்படுத்தி, பாடங்களைக் கற்பித்த ஆசிரியர்களுக்கு வித்தியாலய அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர் மற்றும் ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் என அனைவரும் கல்லூரி சமூகம் சார்பாகப் பாராட்டி, தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

இம்மாணவி, மன்னார் சிலாவத்துறை கொண்டச்சி யைச் சேர்ந்த ஏ.ஏ.ஆர். இமாமுதீன் – கே.எஸ். சபீனா தம்பதியினரின் புதல்வியுமாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *