உள்நாடு

பேருவளை மருதானை சாதுலியா ஸாவியாவில் 159ஆவது வருட சாதுலியா மனாகிப் மஜ்லிஸின் ஆரம்ப வைபவம்

‘ஷாதுலிய்யா தரீக்காவின் ஸ்தாபகர் குத்புல் அக்பர் இமாம் அபுல் ஹஸன் அலியுஷ் ஷாதுலி (றழி) அவர்களின் 850ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு வரலாற்றுப் பிரசித்திபெறற பேருவளை மருதானை சாதுலியா ஸாவியாவில் 159ஆவது வருட சாதுலியா மனாகிப் மஜ்லிஸின் ஆரம்ப வைபவம் 09.04.2026 வியாழக் கிழமை மாலை மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசல் ஜமாஅத் சபைத் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி அல் ஹாஜ் எம்.ஏ.எம் ஹனபியின் வழிகாட்டலின் கீழ் கலீபத்துஷ் சாதுலி மௌலவி எம்.ஐ.எம். றபீக் (பஹ்ஜி) தலைமையில் நடைபெறும்

சாதுலியா தரீக்காவின் ஸ்தாபகர் அஷ் ஷெய்கு நூறுத்தீன் அபுல்ஹஸன் அலியுஷ் ஷாதுலி நாயகம் (றழி) அவர்களின் 850 வது ஜனன தினத்தை முன்னிட்டும் ஏனைய சாதுலிய்யா மஷாய்குமார்களின் ஞாபகர்த்தமாகவும் இம் மஜ்லிஸ் 159 வது வருடமாக இடம்பெறுகிறது.

09 நாட்கள் சாதுலிய்யா மனாகிப் ஓதப்பட்டு உலமாக்களினால் மார்க்க உபன்யாசம் நிகழ்;த்தப்பட்டு எதிர்வரும் 18.04.2026 தமாம் மஜ்லிஸ{டன் நிறைவு பெறும். இதற்கான ஏற்பாடுகளை மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசல் நிருவாக சபையும் சாதுலியா ஸாவியா நிருவாக சபையும் மேற்கொண்டு வருகிறது.

18ம் திகதி தமாம் மஜ்லிஸில் சாதுலிய்யா தரீக்காவின் கலீபத்துல் குலபா மௌலவி அல் ஹாஜ் எம்.இஸட்.எம் முஹம்மத் ஸர் ஆலிம் (பாரி) விசேட பேச்சளாராக கலந்துகொள்வார்.

பேருவளை பீ.எம் முக்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *