உள்நாடு

புத்தளம் நூர் நகருக்கான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் அனர்த்ததினால் கொழும்பு புத்தளம் வரையான ரயில் பாதைகள் மற்றும் பாலங்கள் பல்வேறு இடங்களில் சேதமடைந்த நிலையில் ரயில் சேவைகளும் பல மாதங்கள் இடம்பெறவில்லை

கொழும்பு புத்தளம் ரயில் பாதைகள் மற்றும் பாலங்கள் கட்டம் கட்டமாக திருத்தியமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்தும் கட்டம் கட்டமாக கொழும்பிலிருந்து புத்தளம் வரையான ரயில் சேவைகள் சென்ற மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.

எனினும் புத்தளம் நூர் நகர் ரயில் நிலையத்திற்கான பயணிகள் சேவை இடம்பெறாமல் கடந்த ஒரு மாத காலமாக புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையில் பல்வேறு தரப்பினர் ஊடாக இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது.

இது விடயமாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் ஜே எம் பைசல் மேற்க் கொண்ட முயற்சியின் வாயிலாக புதன்கிழமை(08) முதல் மீண்டும் புத்தளம் பிரதான ரயில் நிலையத்திலிருந்து புத்தளம் நூர் நகர் ரயில் நிலையம் வரையில் பயணிகள் ரயில் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதுபுத்தளம் நூர் நகருக்கான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் அனர்த்ததினால் கொழும்பு புத்தளம் வரையான ரயில் பாதைகள் மற்றும் பாலங்கள் பல்வேறு இடங்களில் சேதமடைந்த நிலையில் ரயில் சேவைகளும் பல மாதங்கள் இடம்பெறவில்லை

கொழும்பு புத்தளம் ரயில் பாதைகள் மற்றும் பாலங்கள் கட்டம் கட்டமாக திருத்தியமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்தும் கட்டம் கட்டமாக கொழும்பிலிருந்து புத்தளம் வரையான ரயில் சேவைகள் சென்ற மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.

எனினும் புத்தளம் நூர் நகர் ரயில் நிலையத்திற்கான பயணிகள் சேவை இடம்பெறாமல் கடந்த ஒரு மாத காலமாக புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையில் பல்வேறு தரப்பினர் ஊடாக இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது.

இது விடயமாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் ஜே எம் பைசல் மேற்க் கொண்ட முயற்சியின் வாயிலாக புதன்கிழமை(08) முதல் மீண்டும் புத்தளம் பிரதான ரயில் நிலையத்திலிருந்து புத்தளம் நூர் நகர் ரயில் நிலையம் வரையில் பயணிகள் ரயில் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *