உள்நாடு

பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்த சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு பிரதிநிதிகள்

சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் (ISA) பிரதிப் பணிப்பாளர் நாயகம் அஸிஸ் கண்ணா (Ashish Khanna) தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் செவ்வாய்க்கிழமை (07) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தனர்.

சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு
(ISA) மற்றும் இலங்கைக்கு இடையிலான கூட்டு மூலோபாயத்தைச் செயற்படுத்துதல் மற்றும் அதனை முன்னெடுத்துச் செல்லுதல் குறித்தும், நாட்டின் சூரிய சக்தி பயன்பாட்டுத் திட்டங்களை விரைவுபடுத்துவது குறித்தும் இக்கலந்துரையாடலின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. அத்தோடு, மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் சூரிய தொழில்நுட்பப் பயன்பாட்டு வள மையமொன்றை (STAR-C) நிறுவுதல், பேட்டரி சேமிப்பு கட்டமைப்புகளை ஒருங்கிணைப்பதற்கான ஆதரவை வழங்குதல் மற்றும் கொள்கை ரீதியான ஒழுங்குமுறை மறுசீரமைப்புகளின் அவசியம் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது..

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *