“ஆரோக்கியத்திற்காக ஒன்றிணைவோம்: அறிவியலுடன் உறுதியாக நிற்போம்”
- உலக சுகாதார தினம்
-ஏப்ரல் 7 2026

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 ஆம் திகதி, உலக சுகாதார அமைப்பின் (WHO) தோற்றத்தை நினைவுபடுத்தும் வகையிலும், உலகளாவிய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும், இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
அந்த வகையில், 2026 ஆம் ஆண்டின் கருப்பொருள் (Theme):
“ஆரோக்கியத்திற்காக ஒன்றிணைவோம்: அறிவியலுடன் உறுதியாக நிற்போம்”
(Together for health. Stand with science.)
இந்த ஆண்டு உலக சுகாதார அமைப்பு,
மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் அறிவியல் மற்றும் தரவுகளின் (Science and Evidence) முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகவும்,
தவறான தகவல்களைத் தவிர்த்து, அறிவியல் பூர்வமான மருத்துவ முறைகளைத் தேர்ந்தெடுக்க மக்களை ஊக்குவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
( ஐ. ஏ. காதிர் கான் )
