லிட்ரோ,லாவ்ஸ் சமையல் எரிவாயு விலைகள் அதிகரிப்பு
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ மற்றும் லாவ்ஸ் சமையல் எரிவாயுக்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 12.5 கிலோ கிராம் நிறைக் கொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 775 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை 4,765 ரூபாய்.
5 கிலோகிராம் நிறைக் கொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 308 ரூபாவால் உயர்ந்துள்ளதுடன் அதன் புதிய 1,910 ரூபாயாகும்.
2.3 கிலோகிராம் நிறைக் கொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 140 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அதன் புதிய 890 ரூபாய் என லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இதன்படி 12.5 கிலோ கிராம் நிறைக் கொண்ட லாவ்ஸ் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 1,070 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 5,700 ரூபாய்.
5 கிலோகிராம் நிறைக் கொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 418 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அதன் புதிய 2,280 ரூபாய் என லாவ்ஸ் சமையல் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது
