அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு இடைநிறுத்தம்
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
தமது கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் உரிய தீர்வுகளை அறிவிக்க தவறும் பட்சத்தில், அடுத்த கட்ட போராட்டம் தொடர்பில் இன்று காலை 8 மணிக்கு பின்னர் தீர்மானிக்கப்படும் என, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் தமது தொழிற்சங்க நடவடிக்கை குறித்த அடுத்தகட்ட தீர்மானத்தை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் மருத்துவ சங்கம் சுட்டிக்காட்டியிருந்தது.
இந்தநிலையில் சுகாதார அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு இணக்கம் வெளியிட்டுள்ளார்.
இதனையடுத்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளது.
