உள்நாடு

மாவனல்லை ஜமாஅதே இஸ்லாமியின் 20 ஆவது இரத்ததானம்

ஸ்ரீலங்கா ஜமாஅதே இஸ்லாமியின் மாவனல்லை கிளையினரால் ஏற்பாட்டு செய்யப்பட்ட இரத்ததான முகாம் அதன் தலைவர் எஸ். ஐ.எம். பௌமி அவர்களின் தலைமையில் ஜமாஅதே இஸ்லாமி அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

“வாழ வைத்து வாழ்வோம் ” என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற இவ் இரத்ததான நிகழ்வில் இனம் மதம் பாராமல் சுமார் 415 பேர் அளவில் இரத்தம் வழங்கினர்.

இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய இரத்த வழங்கல் சேவை பணிப்பாளர் டாக்டர் லக்ஷ்மன் எதிரிசிங்க அவர்களும், கௌரவ அதிதிகளாக மாவனல்லை பிரதேச பிராந்திய செயலாளர் திருமதி வீ.ஓ.எல். எஸ். ரத்னசேகர, கண்டி தேசிய வைத்திய சாலை வைத்தியர் டாக்டர் டிலீத்த குருப்பு,மாவனல்லை பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி பீ . பி. ஹேரத், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் பைஸல் ஆப்தீன்,மாவனல்லை தபாற்கந்தோர் பொறுப்பு அதிகாரி, மாவனல்லை ஆதார வைத்திய சாலை பொறுப்பு அதிகாரி டாக்டர் சமீர, மாவனல்லை வியாபார சங்க தலைவர் கே.எம். அமீனுல்லா உட்பட அதிபர்கள், பிரதேச செயலளர்கள், விசேட பிரமுகர்கள், ஜமாஅதே இஸ்லாமி அங்கத்தவர் என பலரும் கலந்து சிறப்பித்ததோடு ஜமாஅதே இஸ்லாமி மாவனல்லை கிளையின் வரலாறு அடங்கிய சிங்கள மொழியிலான சஞ்சிகை ஒன்றும் வெளியீட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

(பாரா தாஹீர் மாவனல்லை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *