உள்நாடு

புதன்கிழமை விடுமுறை ரத்து..!

எரிபொருள் சேமிப்புக்காக அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட புதன்கிழமை விடுமுறை, இந்த வாரம் முதல் இரத்துச் செய்யப்படுகிறது.
நாளை மறுதினம் ஏப்ரல் 8 ஆம் திகதி புதன்கிழமை முதல், இந்தத் தீர்மானம் நடைமுறைக்கு வருகிறது.
பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள், அரச அலுவலகங்கள் மற்றும் நீதிச் சேவைத் துறைகள் அனைத்தும் இனிமேல் புதன்கிழமைகளில் வழமை போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவிய நெருக்கடி நிலைமையின் போது எரிபொருளைச் சேமிக்க, கடந்த மார்ச் மாதம் 17 முதல் இந்த விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இனிமேல், நிலைமை வழமைக்குத் திரும்புவதாக, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *