விளையாட்டு

பஹ்ரியன் பிரீமியர் லீக் – 2026 தொடக்க விழா

கல்முனை கமு/கமு/அல் பஹ்ரியா மகா வித்தியாலய பழைய மாணவர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற பஹ்ரியன் பிரீமியர் லீக் – 2026 “Bahriyan Premier League – Season III” கிரிக்கெட் தொடர் தொடக்க விழா (03.04.2026) வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணிக்கு பஹ்ரியன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு அல்-பஹ்ரியா மகா வித்தியாலய அதிபர் எம்.எஸ்.எம். பைசல் அவர்கள் தலைமை தாங்கினார். பிரதம விருந்தினராக அஜ்மா குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சட்ட முதுமாணி அகீல் ஜுனைத் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.

அத்துடன், சிறப்பு விருந்தினர்களாக பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் எஸ்.எம். நிம்சாத் மற்றும் பழைய மாணவர்கள் அமைப்பின் செயலாளர் யு.எல்.எம். ஹாஜா ஆகியோரும் பாடசாலை ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் அமைப்பின் நிர்வாகிகள் உட்பட பலரும் பங்கேற்கின்றனர்.

இந்நிகழ்ச்சி, பாடசாலை பழைய மாணவர் சங்கம் மற்றும் ஏற்பாட்டு குழுவினரால் சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதுடன் 19 அணிகள் பஙகேற்கிறது. இறுதியாட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்த கிரிக்கெட் தொடர், இளைஞர்களின் விளையாட்டு திறன்களை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(நூருல் ஹுதா உமர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *