உள்நாடு

கொழும்பு மத்திய இ.போ.ச. பஸ் நிலையம் நாளை மறுதினம் திறப்பு..!

புதுப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு மத்திய இ.போ.ச. பஸ் நிலையம், நாளை மறு தினம் (08) காலை 9.30 மணியளவில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது.
இரண்டு முனையங்களைக் கொண்ட இந்த பஸ் நிலையத்தில், தரைத்தளம் பஸ் தரிப்பிடமாகவும், இரண்டாம் தளம் ஓட்டுநர் – நடத்துநர் ஓய்வறைகளாகவும், மூன்றாம் தளம் நிர்வாக அலுவலகங்களாகவும் நவீன வசதிகளுடன் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
இலங்கை விமானப் படையின் உழைப்புப் பங்களிப்புடன் இந்த பஸ் நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 424 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *