உள்நாடு

மனிதநேயத்தின் அழகிய எடுத்துக்காட்டு

எமது நாட்டில் ஏற்பட்ட டிட்வா புயலின் கடினமான காலகட்டத்தில், மருதமுனை ஜம்இய்யத்துல் உலமாவின் ஊடாக, புத்தளம் நகர கிளை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு ரூபா இரண்டு கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த நிவாரணங்கள் புத்தளம் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாகப் பகிர்ந்து வழங்கப்பட்டன.

அந்த அவசரநிலையில் மக்களுடன் நின்று ஆதரவளித்ததற்காக நன்றியைத் தெரிவிக்கும் நோக்கில், புத்தளம் நகரக்கிளை உறுப்பினர்கள் மருதமுனைக்கு நேரில் சென்று சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது:
புதிய காரியாலய கட்டமைப்பு குறித்து கலந்துரையாடப்பட்டது
மனிதநேய சேவைக்கு பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டதுடன்,
நன்றிக்கடிதம் வழங்கப்பட்டது.
மேலும், எதிர்கால இணைப்பு திட்டங்களும் வகுக்கப்பட்டன.

அதோடு, பொதுச் சம்மேளனம் ஒன்றை உருவாக்க வேண்டிய அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

ஊடகப்பிரிவு
அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமா
புத்தளம்
நகரக்கிளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *