உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இலங்கையில் நிலவும் வறண்ட வானிலை ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி முதல் மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எனினும் இலங்கையில் நிலவும் வெப்பமான வானிலை தொடரும் எனவும் வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும் மேற்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் உள்ள பல இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் எனவும், அதிகாலை நேரங்களில் மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் இடியுடன் கூடிய மழையின் போது, ​​தற்காலிகமாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் வீசும் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கு, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *