உள்நாடு

வாழைச்சேனை – செம்மண்ணோடையில் பாதுகாப்புக் கதிரை

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட செம்மண்ணோடை அஹமத் பள்ளிவாசல் சந்தியில் மக்கள் பாதுகாப்புக்காக மரக்கதிரை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

பள்ளிவாசல் சந்தியிலுள்ள வீதியின் வடிகான் பகுதி உடைந்த நிலையில் காணப்படுகிறது. அவ் வீதியால் பயணிக்கும் பொதுமக்கள் ஆபத்தில் இருந்து தவிர்ப்பதற்காக வேண்டி குறித்த இடத்தில் மரக் கதிரை ஒன்று மக்கள் பாதுகாப்புக்காக வைக்கைப்பட்டுள்ளது.

இவ்வாறு உடைந்த நிலையில் காணப்படும் வீதியை சீர் செய்து பொதுமக்கள் அசௌகரியமின்றி பயணிக்க பிரதேச சபை நிருவாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டிக் கொள்கின்றனர்.

(எச்.எம்.எம்.பர்ஸான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *