ஒரு இலட்சம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்றைய தினம் சந்தைக்கு விநியோகம்
நாட்டில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவிய நிலையில் ஒரு இலட்சம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்றைய தினம் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினத்தில் மாத்திரம் 80,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நேற்றைய தினம் (22) 3700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது.
மேலும் 3,900 மெட்ரிக் தொன் எரிவாயு தொகையைக் கொண்ட கப்பலொன்று எதிர்வரும் 25 ஆம் திகதி நாட்டை வந்தடையும்.
இதேவேளை, 3,700 மெட்ரிக் தொன் எரிவாயு தொகையுடன் மற்றுமொரு கப்பல் 28 ஆம் திகதி நாட்டிற்கு வரவுள்ளது.
இந்நிலையில் சந்தையில் எரிவாயுவை பதுக்கி வைப்பதைத் தவிர்க்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை வர்த்தக முகவர்களுக்கு அறிவித்துள்ளது.
