உள்நாடு

அட்டாளைச்சேனை அல்- இபாதா கலாசார மன்றத்தின் ஏற்பாட்டில் ஹதீஸ் மஜிலிஸ்

அட்டாளைச்சேனை அல்இபாதா கலாசார மன்றத்தின் ஏற்பாட்டில் வருடந்தோரும் நடாத்தப்பட்டு வருகின்ற ஹதீஸ் மஜிலிஸ் நிகழ்ச்சி பெரிய பாலத்தடி முன்றலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22)நடைபெற்றது.

அல் இபாதா கலாசார மன்றத்தின் தலைவர் ஆசிரிய ஆலோசகர் எம். ஐ. சப்ரி மௌலவி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் எம். ஐ.எம்.றிஸ்வி முப்தி பிரதான மார்க்கச் சொற்பொழியை நிகழ்த்தினார்.

அல் இபாதா கலாசார மன்றத்தின் ஸ்தாபகராக செயற்பட்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் வழிகாட்டலின் கீழ் கடந்த 15 வருடங்களாக புனித ரமழான் மாதங்களை முன்னிட்டு இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள மார்க்க அறிஞர்களை அழைத்து வந்து மார்க்கச் சொற்பொழிவுகளை நாடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(றிபாஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *