2025/2026 அகில இலங்கை ரீதியில் அல் குர்ஆன் மத்ரஸாக்களுக்கு மத்தியில் நடைபெற்ற இஸ்லாமிய போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா..!
தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் அல் குர்ஆன் மத்ரஸாவின் 25வது ஆண்டு நிறைவு நினைவாக இவ்விழா நடத்தப்பட்டது.
இதற்கான போட்டி ஜனவரி 10, 2026 அன்று அல் ஹிக்மா கல்லூரியில் நடைபெற்றது, அகில இலங்கை ரீதியாக மத்ரஸாக்களில் இருந்து கிட்டத்தட்ட 1,000 மாணவர்கள் பங்கேற்றனர்.
அப்போட்டிகள் அனைத்தும் மூன்று பிரிவுகளாக சுமார் 70 மத்தியஸ்தர்களின் மதிப்பீட்டின் கீழ் இனிதே நிறைவுற்றது.
அதன் பரிசளிப்பு விழா பெப்ரவரி 14, 2026 அன்று கொத்தடுவயில் உள்ள NAAS கலாசார நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
அவ்விழாவுக்கு பிரதம அதிதிகளாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் சகோதரர் அஸ்ரூப் மற்றும் நாஸ் கலாசார நிலையத்தின் பணிப்பாளர் அஷ் ஷேக் நஜ்மான் ஸாஹித் , அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் கொழும்பு கிளையின் தலைவர் அஷ் ஷேக் அப்துல் முக்ஸித் ஹஸரத் மற்றும் அமீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ் ஷேக் தாஸிம் (கபூரி) , அஷ் ஷேக் கலாநிதி மஹ்தூம் மதனி ,பாத ஹேவாகட்ட பிரதேச சபை உறுப்பினர் மற்றும் தெல்தோட்டை மஸ்ஜித் சம்மேளனத் தலைவர் அஷ் ஷேக் முனீர் ஸாதிக் காஷிபி அவர்களும் இன்னும் பல முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
வெற்றிப் பெற்ற அனைத்து வெற்றியாளர்களுக்கும் பணப்பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.




