ரி20 உலகக் கிண்ணத்தின் சுப்பர் 8 போட்டி; இன்று இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இலங்கை
இருபதுக்கு இருபது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சுப்பர் 8 சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டி இன்று (22) பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியானது இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. சொந்த மண்ணில் நடைபெறும் இந்த போட்டியில் இலங்கை அணி தனது திறமையை நிரூபிக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
