உள்நாடு

இன்றும் பரவலாக மழை பெய்யலாம்

இலங்கையை அண்மித்த கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணியின் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த திணைக்களம், சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது. 

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *