கொழும்பில் கொண்டாடப்பட்ட சவூதி அரேபிய ஸ்தாபக தினம்.
சவுதி அரேபியாவின் ஸ்தாபக தின கொண்டாட்டம் இன்று (20) இலங்கைக்கான சவுதி தூதர் காலித் பின் ஹமுத் அல்-கஹ்தானியின் தலைமையில் கொழும்பில் நடைபெற்றது.
இது 1727 ஆம் ஆண்டு முதல் சவுதி அரசின் நிறுவலை நினைவுகூரும் தினமாகும். 2026 ஆம் ஆண்டில், இந்த தினம் ரமழானுடன் ஒருங்கிணைகிறது; இதனால் ஆன்மிக சிந்தனை மற்றும் தன்னிலைப் பரிசோதனையின் உணர்வு மேலும் ஆழமாகிறது.
இந் நிகழ்வின் பிரதம அதீதியாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கலந்து கொண்டார்.
இலங்கை ஜனாதிபதி, அரசாங்கம், மக்கள் சார்பாக மன்னர் சல்மான், இளவரசர் பின் சல்மான் மற்றும் சவூதி மக்களுக்கும் வாழ்த்துக்களை அமைச்சர் குறிப்பிட்டார்.
நிகழ்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ராஜதந்திரிகள், முன்னாள் அரசியல்வாதிகள் என பலர் பலர் கலந்து கொண்டனர்.


