கற்பிட்டி ஆனவாசல் பகுதியில் 10 கிலோ கஞ்சாவுடன் மூவரை கைது செய்த பொலிஸார்
கற்பிட்டி ஆனவாசல் பகுதியில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற விஷட தேடுதல் நடவடிக்கையின் போது ஆறு பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த10 கிலோ 400 கிராம் கஞ்சாவை கற்பிட்டி பொலிஸார் கைப்பற்றியதுடன் மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
கற்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விஜேலால் தலைமையிலான நான்கு பேர் அடங்கிய பொலிஸ் குழுவினர் இந்த விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் கைப்பற்றப்பட்ட 10 கிலோ 400 கிராம் கஞ்சா பொதிகள் மற்றும் சந்தேக நபர்கள் மூவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
