பேருவளை பாஸியதுன் நஸ்ரியா அஹதிய்யாவில் பரிசளிப்பும் ரமழான் வரவேற்பும்
பேருவலை, மருதானை அல்-பாஸியதுன் நஸ்ரியா அஹதியா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும், ரமலானை வரவேற்கும் நிகழ்வும் பாடசாலை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
அஹதியா பாடசாலை அதிபர் அஹமத் சுஹைர் (நளீமீ) இந்த வைபத்திற்கு தலைமை வகித்தார்.
இந்கிகழ்வில் பிரதம அதிதியாக பேருவளை நகர பிதா மபாசிம் அசாஹிர் கலந்துகொண்டார்.
நகர சபை தலைவரினால் அஹதிய்யா பாடசாலைக்கு 78 பிலாஸ்டிக் கதிரைகளும் வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
விழாவில் களுத்துறை மாவட்ட அஹதியா சம்மேளன தலைவர் எம்.எச்.எம் உவைன் ஜே.பி, அஹதிய்யா சம்மேளன தேசிய அமைப்பாளர் அல் ஹாஜ் ஏ.எல்.எம் அஸ்வர், சவுதி அரேபிய தூதரக முன்னாள் நிர்வாக அதிகாரி அஷ் ஷெய்க் எம்.எஸஃஎம் நஸீர் (நளீமி) உட்பட பல பிரமுகர்கள் அஹதிய்யா பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
மாணவர்களின் பல்வேறு இஸ்லாமிய கலை கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மருதானை அஹதிய்யா மாணவர்களின் திறமைகளை பிரதம அதிதி பேருவளை நகர பிதா பெரிதும் பாராட்டினார்.





(பேருவளை பீ.எம். முக்தார்)
