க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம்
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாளை (17) செவ்வாய்க்கிழமை நாடு தழுவிய ரீதியில் ஆரம்பமாகவுள்ளன.
இம்முறை பரீட்சை தொடர்பான முக்கிய தகவல்கள் மற்றும் மாணவர்களுக்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன அதனடிப்படையில் பெப்ரவரி 17 முதல் 26 ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறும் மொத்தம் 451,463 மாணவர்கள் தோற்றுகின்றனர். நாடளாவிய ரீதியில் 3,545 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே கருத்துத் தெரிவிக்கையில், மாணவர்கள் பரீட்சை ஆரம்பமாவதற்கு குறைந்தது ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக தத்தமது பரீட்சை நிலையங்களுக்கு வருகை தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். காலதாமதத்தைத் தவிர்க்கவும், பதற்றமின்றி பரீட்சையை எதிர்கொள்ளவும் இது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் இன்றைய நாளை (16) எவ்வாறு கழிக்க வேண்டும் என்பது குறித்து ராகம மருத்துவ பீடத்தின் பேராசிரியர், விசேட மனநல மருத்துவர் மியரு சந்திரதாச ஆலோசனைகளை வழங்கியுள்ளார்
“மாணவர்கள் இன்றைய தினம் தங்களது மனதை மிகவும் இலகுவாகவும், அமைதியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமான அழுத்தங்களைச் சுமக்காமல், நிதானமாகப் பரீட்சைக்குத் தயாராவது சிறந்த பெறுபேறுகளைப் பெற உதவும்.” என தெரிவித்துள்ளார்.
