உள்நாடு

கற்பிட்டியில் இடம்பெற்ற சிறுவர்களுக்கான போசாக்கு உணவு வழங்கும் திட்டம்

கற்பிட்டி செடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்பு சமய சமூக நடுநிலை (சீ.எஸ்.ஆர்) மையத்தின் நிதி பங்களிப்பின் கீழ் தில்லையூர் மீனவ சங்கத்தின் தலைவர் எம் சபுறுல்லாஹ்வின் வேண்டுகோளின் பெயரில் கற்பிட்டி பிரதேசத்தில் 10 வயதிற்குட்பட்ட போசாக்கு குறைந்த சிறுவர்களுக்கு போசனை உணவு வழங்கும் திட்டம் சனிக்கிழமை (14) கற்பிட்டி தில்லையூர் ஜூம்ஆ பள்ளிவாசலின் மேற்பார்வையில் உள்ள மீனவ சங்கத்தின் கட்டிடத்தில் செடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.ஆர். முனாஸ் தலைமையில் இடம்பெற்றது

மேற்படி நிகழ்வில் சமய சமூக நடுநிலை மையத்தின் தேசிய அமைப்பாளர் பீ. மிலான் பெரேரா, தேசிய இணைப்பாளர் சமிர பெரேரா, தில்லையூர் பாடசாலையின் அதிபர் எஸ் எம் அரூஸ், தில்லையூர் ஜூம்ஆ பள்ளிவாசலின் பேஷ் இமாம் எம்.டி. றிப்கான்( றஹ்மானி) , பள்ளிவாசலின் தலைவர் எம். அன்வர்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்தின் பிரதான நோக்கமாக போசனை குறைபாடுடன் காணப்படும் சிறார்களை இணங்கண்டு அவர்களுக்கான போசாக்கான உணவுகளை மாதாந்தம் வழங்குவதுடன் தினசரி உணவிலும் அவ்வாறான உணவுகளை உட்கொள்ளச் செய்யும் வழிகளை ஏற்படுத்துவதாகும். எனவும் தெரிவிக்கப்பட்டது.

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *