உள்நாடு

பிரதியமைச்சர் சரத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட கல்வெல்ல ஜும்ஆ பள்ளி வீதி அபிவிருத்தி பணிகள்

கிராமிய மேம்பாட்டு 2025 திட்டத்தின் கீழ் பொலன்னறுவை கல்வெல்ல பழை ஜும்மா பள்ளிவாசல் வீதியின் அபிவிருத்தி பணிகள் பிரதி அமைச்சர் ரீ.பீ.சரத்  தினால் (11) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த வீதி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படவுள்ளதுடன் இதற்காக 43 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நேரடி தொழிலாளர் பங்களிப்பின் கீழ் சுமார் இரண்டு மாதங்களில் புனரமைப்பு பணிகளை நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் போது பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ரத்னசிறி, தமங்கடுவ பிரதேச சபையின் தலைவர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைமை பொறியாளர் மற்றும். பிரதேச வாசிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *