உள்நாடு

மாதிரி ஐ.நா சபை மாநாட்டில் பாலஸ்தீன் நட்டை பிரதிநிதித்துவப்படுத்தினார் ஊடகவியலாளர் ஸாபித் துல்பிகார்!!!

சர்வதேச இராஜதந்திரிகள் அமைப்பின், 4 ஆவது மாதிரி ஐக்கிய நாடுகள் சபை மாநாடு, கடந்த பெப்ரவரி 7,8 மற்றும் 9 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெற்றது.

“செயற்கை நுண்ணறிவு மூலம் அமைதி மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை கட்டியெழுப்புதல்” என்ற தொனிப்பொருளில் 60 நாட்டு பிரதிநிதிகள் கலந்துகொண்டு நடைபெற்ற, இம்மாநாட்டில் பெருவளையைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஸாபித் துல்பிகார் அவர்கள், பாலஸ்தீன நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

இம்மாநாட்டில் உரையாற்றிய அவர், “Ai வளர்ச்சியானது தானியங்கி ஆயுதப் பயன்பாடு மூலம் மனித உரிமைகளையும் , சர்வதேச நம்பிக்கையையும் பாதிப்பதாகவும், அமைதிக்கும் வளர்ச்சிக்கும் சேவை செய்யும் வகையில்,
அனைவருக்கும் சமமான அணுகலை உறுதி செய்யும்
சர்வதேச AI ஒழுங்குமுறை கட்டமைப்பை
உருவாக்க பொதுச் சபையை பாலஸ்தீன் அழைக்கிறது” என்றும், அவர் குறிப்பிட்டார்.

(பேருவலை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *