மாவடிப்பள்ளியில் ‘பிரஜாசக்தி’ உறுப்பினர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு..!
ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உதித்த கிராமிய அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஏற்பாட்டில், ‘பிரஜாசக்தி’ வறுமை ஒழிப்புக்கான தேசிய இயக்கத்தை நடைமுறைப்படுத்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கான குழுக்களின் உறுப்பினர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (10) செய்வாய்கிழமை அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவினால் காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாவடிப்பள்ளி
அங்கத்தவர்களுக்கான நியமனம் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினரின் வேண்டுகோளின் பெயரில் பூர்த்தி செய்யப்பட்ட இரண்டு வீதிகளும் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், மாவடிப்பள்ளி கிழக்கின் பிரஜாசக்தி தவிசாளர் தோழர் ஏ.எம்.சப்றூஸ், பிரதேச செயலக சமூக மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள்,
பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர், இணைப்புச் செயலாளர் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)








