ஐ.ம. சக்தி உறுப்பினர் போதைப் பொருளுடன் கைது
பதுளை, பல்லேவத்த பகுதியில் போதைப்பொருளுடன் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, பொலிஸார் உளவாளி ஒருவரைப் பயன்படுத்தி மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது
சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது விற்பனைக்காகத் தயார் செய்யப்பட்டிருந்த 86 கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கந்தகெட்டிய பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அவர் ஹாபத்கமுவ மின்சார வேலி பாதுகாப்பு உதவி உத்தியோகத்தராகவும் கடமையாற்றுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் பதுளை நீதவான் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
