அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் பேச்சுவார்த்தை
பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (17) காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்த அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்துக்கு சென்றுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்காகவே சங்கத்தின் பிரதிநிதிகள் அங்கு சென்றுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
