உலகக்கிண்ணத்திற்கான வரவை உறுதி செய்தது போர்த்துகல்
23ஆவது “பிபா” உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிக்கு போர்த்துகல் அணி தகுதிப் பெற்றுள்ளது.
23ஆவது “பிபா” உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் இடம்பெறவுள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்கும் 48 அணிகளில் போட்டியை நடத்தும் நாடுகளை தவிர்த்து மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே நுழைய முடியும்.
கண்டங்கள் வாரியாக பல்வேறு நாடுகளில் நடக்கும் தகுதி சுற்று இறுதி கட்டத்தை எட்டி விட்டது.
இந்நிலையில், உலகக் கிண்ண தகுதி சுற்று போட்டியில் இன்று அர்மீனியா – போர்த்துகல் மோதின.
இதில் 9:1 என்ற கோல் கணக்கில் அர்மீனியாவை வீழ்த்தி போர்த்துகல் அபார வெற்றிபெற்றது.
அணியின் தலைவர் ரொனால்டோ இல்லாமலேயே அர்மீனியாவை போர்த்துகல் வீழ்த்தியது.
ஏனெனில் கடந்த போட்டியில் ரெட் கார்ட் வாங்கியதால் இந்த போட்டியில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த வெற்றியின் மூலம் உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடருக்கு போர்த்துகல் அணி தகுதி பெற்றுள்ளது.
அத்துடன் 6வது முறையாக உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் ரொனால்டோ பங்கேற்க உள்ளார்.
