சிங்கள பேச்சுப் போட்டியில் அல் அக்ஸா மாணவி நயீம் ஆயிஷா மனால் தேசிய மட்டத்தில் தங்கம் வென்றார்
இரண்டாம் மொழி சிங்கள பேச்சுப் போட்டியில் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் தரம் எட்டில் கல்வி பயிலும் மாணவி நசீம் ஆயிஷா மனால் தேசிய மட்டத்தில் முதலாம் இடம் பெற்று தங்கம் பதக்கம் வென்றார்.
தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கு இடையிலான இரண்டாம் மொழியான சிங்கள மொழிப் போட்டி நிகழ்ச்சிகளில் சிங்களப் பேச்சுப் போட்டியில் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மாணவியான நசீம் ஆயிஷா மனால் பங்கேற்றிருந்தார்.
இவர் கோட்ட மட்டம், வலய மட்டம், மாவட்ட மட்டம் மற்றும் மாகாண மட்டங்களில் முதல் இடத்தினைப் வெற்றி தேசிய மட்டத்திற்கு தெரிவாகியிருந்தார்.
இந்நிலையில் இன்று (15) கல்வி அமைச்சில் இடம்பெற்ற தேசிய மட்டப் போட்டியிலும் முதல் இடத்தினைத் தனதாக்கிக் கொண்டார் நசீம் ஆயிஷா மனால். அதற்கமைய முதலிடத்தினைப் பெற்றுக் கொண்ட அவருக்கு தங்கப் பதக்கத்துடன் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது.
இவ்வாறு வரலாற்று சாதனை படைத்து பாடசாலைக்கும் பிரதேசத்திற்க்கும் இதுவரை கால வரலாற்றில் காணப்பட்ட தேசிய கனவை நனவாக்கிய மாணவிக்கும், வழிகாட்டிய பாடசாலையின் அதிபர் அமீர் மற்றும் பயிற்றுவித்த சிங்களப்பாட ஆசிரியைகளான பவானி, சந்தமாலி தனுஜா மற்றும் இணைப்பாளர் ஆசிரியை பரீன் இல்ஹாம் மற்றும் பெற்றோருக்கும் பாடசாலை சமூகம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

(அரபாத் பஹர்தீன்)
