உள்நாடு

கொங்காவலையில் இரத்ததான முகாம்

மாத்தளை வை.எம்.எம்.ஏ. ஏற்பாட்டில் தொடர்ந்து நான்காவது வருடமாக நடத்தப்படும் இரத்தான வைபவம் மாத்தளை கொங்காவலை வீதி முஸ்லிம் வாசிக சாலை மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக வை.எம்.எம்.ஏ. தலைவர் ஏ. எச். எம் ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.

காலை 9 மனி தொடக்கம் மாலை 3 மனிவரை இடம்பெறும் இவ் இரத்தான வைபவத்தில் மாத்தளை ஆதார வைத்தியசாலையை சேர்ந்த பல வைத்தியர்கள் கலந்துக்கொள்ளவுள்ளதாகவும் இரத்ததான நிகழ்வில் கலந்துக்கொள்ள விரும்பும் நலன் விரும்பிகள் அன்றைய தினம் காலை 8 மனிக்கு மேற்படி மண்பத்திற்கு வரும்படி தலைவர் ரிஸ்வான் மேலும் தெரிவித்தார்.

(எம். எஸ். எம். மசாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *