மாத்தளை நாவுலவில் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டம்
“சுபீட்சமான நாடு, வளமான வாழ்வு” எனும் அரசின் முக்கிய தொனிபொருளை நடைமுறைப்படுத்திடும் க்ளீன் ஸ்ரீ லங்கா நடமாடும் சேவையும், பொதுமக்கள் அத்தியாவசிய சேவைகளை நிவர்த்தி செய்திடும் முக்கிய நடமாடும் சேவை இம் மாதம் 21 ஆம் திகதி காலை 9 மனி தொடக்கம் மாலை 4 மனி வரை மாத்தளை மாவட்ட நாவுல இளைஞரணி முகாம் வளாகத்தில் இடம்பெறவுள்ளதாக மாத்தளை மாவட்ட செயலாளர் பிரசன்ன மதநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் ஜனாதிபதி செயலகளம், மாத்தளை மாவட்ட செயலகம், மத்திய மாகான சபை, இம்மாவட்ட சகல பிரதேச செயலக காரியலயங்கள், மாத்தளை மாவட்ட மாநகர சபைகள், உள்ளுராட்சி மன்றங்கள் என்பன இணைந்து மேற்படி வேலை திட்டத்தை நடைமுறைபடுத்தவுள்ளதாக மாவட்ட செயலாளர் பிரசன்ன மதநாயக்க தெரிவித்தார்.
இந்த நடமாடும் சேவைளின்போது ஜனாதிபதி நிதியை பெற்றுக்கொள்ளல், காணி பிறப்புச்சான்றுதல் பத்திரங்கள், விவாக பதிவுகள், அஸ்வெசும, சமுர்தி மற்றும் வீட்டுத்திட்ட நிவாரண உதவிகள் என்பவற்றுக்கு மேற்படி நடமாடும் சேவைகள் மூலம் உடனடி நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் கண் சிகிச்சை , பிரசவ மற்றும் சிறுவர் பராமரிப்பு, பற் சிகிச்சை, தொற்றா நோய் போன்றவட்டுக்கு தேசிய மற்றும் மேலேத்தேய வைத்திய சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளதாகவும் விசேடமாக போதை பொருள் பாவிப்போரை இனங்கண்டு அவர்களுக்கு தொழில் முயற்சிகளை பெற்றுக்கொடுப்தற்குண்டான நடவடிக்கைகள் இவ் நடமாடும் சேவையில் வழங்கப்படவுள்ளது விசேட தன்மையாகும்.
இந்த நடமாடும் சேவையை முன்னிட்டு அரச மற்றும் அரசசாற்பட்ட 30 திணைக்களங்களின் 800 அதிகாரிகள் கலந்துகொள்வதுடன் 100 மேற்பட்ட கண்காட்சிக் கூடங்கள் இந்த நடமாடும் சேவையின் போது மக்கள் பார்வைக்காக விடப்படவுள்ளது.
இதற்கு சமமாக நொவம்பர் 22ஆம் திகதி மாத்தளை மாவட்ட சகல பிரதேச செயலக பிரிவுகள் உள்வாங்கப்படும் வகையில் சூழல் சுற்றாடல் சுகாதாரத்தை இலக்காகக் கொண்டு பொலிதீன் பானையை முற்றாக நிவர்த்தி செய்யும் முக்கிய வேலை திட்டங்கள் இடம்பெறவுள்ளன.
இவ் நடமாடும் சேவையின் போது பிரதியமைச்சர் கமகெதர திசாநாயக்க உட்பட மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளுராட்சிமண்ற தலைவர்கள் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளதாக மாவட்ட செயலாளர் பிரசன்ன மதநாயக்க மேலும் தெரிவித்தார்.
(எம் எஸ். எம். மசாஹிம்)
