Tuesday, March 3, 2026
Latest:
உள்நாடு

நீர்கொழும்பில் இலவச வைத்திய முகாம்

நீர்கொழும்பு “நிகம்பு முஸ்லிம் வுமன் அஸோசியேஷன்” ஒழுங்கு செய்திருந்த இலவச வைத்திய முகாம், அமைப்பின் தலைவி றிஸ்மியா ஹலால்தீன் தலைமையில், நீர்கொழும்பு அல் – ஹிலால் மத்திய கல்லூரி மண்டபத்தில், சனிக்கிழமை காலை இடம்பெற்றது.

நீரிழிவு, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரோல் பரிசோதனை, இருதய நோய், சிறுநீரக நோய், காது மூக்கு தொண்டை மற்றும் கண் சம்பந்தமான நோய்கள், குழந்தை மருத்துவம், சர்ம நோய், அதிக எடையுள்ளவர்கள் தொடர்பான மற்றும் பெண்கள் சார்ந்த நோய்கள் போன்றவற்றிட்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், தேவையான குழந்தைகளுக்கு தடுப்பு ஊசிகளும் ஏற்றப்பட்டன.

தொடர்ந்தும் சிகிச்சைகளுக்குத்
தேவையான நோயாளிகளை, நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியாசலை மருத்துவ சிகிச்சை நிலையங்களுடன் தொடர்பு படுத்தப்பட்டனர்.

இந்த இலவச மருத்துவ முகாமில் விசேட வைத்திய நிபுணர் வித்யாநிதி, டாக்டர் ரிஸ்னி சக்காப் உட்பட துறைசார் வைத்தியர்கள் 18 பேர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.

நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் நீர்கொழும்பு சுகாதார வைத்திய நிலையம் என்பவற்றின் ஆதரவுடன் இடம்பெற்ற இந் நிகழ்வில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், சுகாதார விழிப்பூட்டல் கண்காட்சிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டன.

விசேட வைத்திய நிபுணர் வித்யாநிதி, டாக்டர் ரிஸ்னி சக்காப், டாக்டர் மேரி ஹில்டா, டாக்டர் ஜயசீலன், தாதி சாமலி பத்மபெரும, நீர்கொழும்பு பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு பொறுப்பதிகாரி ஞெய் சகீஹா ஹஸீம் ஆகியோர் விழிப்பூட்டல் விரிவுரைகளை நடாத்தினர். ஆண்கள் பெண்கள் என சுமார் 500 பேர் இந்த இலவச மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *