அட்டாளைச்சேனை ரஹ்மானியாபாத் வீதி ஆதம்பாவா எம்.பி. யினால் ஆரம்பித்து வைப்பு
அட்டாளைச்சேனை ரஹ்மானியாபாத் வீதி, 7.0 மில்லியன் ரூபா செலவில் 600 மீற்றர் தூரம் காபட் வீதியாக செப்பனிடும் பணிகள் நேற்று (09) ஞாயிற்றுக்கிழமை அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், இலங்கை அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் போது அட்டாளைச்சேனை பிரதேச தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் சுல்தான் சத்தார், அட்டாளச்சேனை தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள், பிரஜா சக்தி குழுக்களின் தவிசாளர்கள், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள், வீதி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள்,
பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பு செயலாளர் ஆசிரியர் எஸ்.எம். ஆரிப் உட்பட பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.



(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
