பட்ஜெட்டில் ஊடகவியலாளர்களுக்காக குறிப்பிடப்பட்டுள்ள முன்மொழிவுகள் அமுல்படுத்தப்பட வேண்டும்..! -ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தபாக போஷகர் என்.எம். அமீன் (வீடியோ உள்ளே..)
அடுத்த வருடத்திற்கான பட்ஜெட்டில் ஊடகவியலாளர்களுக்காக குறிப்பிடப்பட்டுள்ள முன்மொழிவுகள் அமுல்படுத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தபாக போஷகரும் மூத்த ஊடகவியலாளருமான என்.எம். அமீன் தெரிவித்தார். அத்துடன் இந்த பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கான வீட்டுத் திட்டம் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையினையும் அவர் முன்வைத்துள்ளார்.
ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மூத்த ஊடகவியலாளர் அமீன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
