விளையாட்டு

இளையோர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்றார் வீர பராக்கிரம மகாவித்தியாலய மாணவன்

பஹ்ரைன் நாட்டில் அண்மையில் நடைபெற்ற இளையோர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கு பற்றிய மாத்தளை கல்வி வளையத்துக்குட்பட்ட வீர பராக்கிரம மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று வரும் மாணவனான சத்துர திலுன்ஜன ஜயதிஸ்ஸ 19 வயதின்கீழ் ஈட்டி எரியும் போட்டியில் 3ஆம் இடத்தைப் பெற்று வெண்கல பதக்கத்தை வெற்றி கொண்டார்.

இதன் மூலம் இவர் தனது பாடசாலைக்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார் .
இவரைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று நேற்று பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போது விளையாட்டு வீரரான சத்துர திலுன்ஜன ஜயதிஸ்ஸ யடவத்த நகரிலிருந்து பாடசாலைக்கு வாகனம் மூலம் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை பழைய மாணவர்கள் , அபிவிருத்தி சங்க உறுப்பினர் பலரும் கலந்து கொண்டனர்.

(மாத்தளை எம்.சதூர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *