மாத்தளை மாவட்டத்துக்கான காதி நீதவானாக அஷ்ஷெய்க் இஸ்வார்தீன் (நஜாஹி) நியமனம்
மாத்தளை மாவட்டத்துக்கான புதிய காதிநீதவானாக அல்ஹாஜ் அஷ்ஷெய்க் ஏ .டப்லிவ் . இஸ்வார்தீன்(நஜாஹி) நீதிச்சேவை ஆணைக்குழுவினால் கடந்த 3 ந்திகதியன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
உக்குவளை இல 17/1 , மத்திய வீதி , வரகந்தவத்தை வரக்காமுர கிராமத்தைச் சேர்ந்த இவர் வரக்காமுற வரகந்த அப்ரார் ஜும்ஆ மஸ்ஜித் தலைவராகவும் , நலன்புரிச்சங்க உபதலைவராகவும், வரக்காமுற ஜமியத்துல் உலமாச் சபை தனாதிகாரியாகவும் மாத்தளை ஜமியத்துல் உலமாச்சபை உறுப்பினராகவும் இருந்துவருவதுடன் வரக்காமுற சீனி அப்பா தர்காவின் 35 வருடகால முன்னாள் பிரதம இமாமும் சமூக ஆர்வலருமாவார்.
