கஹட்டகஸ்திகிலியவில் யானை தாக்கி விவசாயி பலி
கஹட்டகஸ்திகிலிய திவுல்வெவ பொலிஸ் பகுதியில் இன்று காலை காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக திவுல்வெவ பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த ஒரு வாரத்திற்குள் யானை தாக்குதலால் இந்தப்பகுதியில் ஏற்பட்ட இரண்டாவது மரணம் இதுவென பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் 46 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான திவுல்வெவ பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாயி ஆவார்.திவுல்வெவ முக்கிரிவெவ பிரதான வீதியில் இன்று (09) காலை 06.00 மணியளவில் தனது விவசாய பண்ணைக்கு துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போது காட்டு யானை தாக்கியதில் அந்த நபர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக திவுல்வெவ பொலிசார் தெரிவித்தனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)
