2026 வரவு – செலவுத்திட்டம்: ஆதம்பாவா எம்.பி.யின் முயற்சியில் நிந்தவூர் கலாசார மண்டப புனர்நிர்மாணத்திற்கு நிதி ஒதுக்கீடு..!
2026 ஆம் ஆண்டு அபிவிருத்திக்கான வரவு – செலவுத்திட்டத்தின் போது அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அரசியலமைப்புப் பேரவை உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா முன்வைத்த வேண்டுகோளுக்கு அமைய, அரைகுறையாகக் காணப்பட்ட நிந்தவூர் கலாசார மண்டபத்தினை (Cultural Hall) புனர்நிர்மாணம் செய்து அதனைப் பூர்த்தி செய்வதற்கு 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)




