உள்நாடு

வடமத்தியில் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள முச்சக்கர ஓட்டுனர்களுக்கு இருநாள் பயிற்சி வகுப்பு.

வடமத்திய மாகாணத்தில் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள முச்சக்கர வண்டி ஓட்டுநர்களின் நெறிமுறைகளை மேம்படுத்துவதற்கான இரண்டு நாள் பயிற்சித்திட்டம் தூய்மையான இலங்கைத்   திட்டத்துடன் இணைந்து கடந்த 06 ஆம் 07 ஆம் திகதிகளில் மாகாண சபை கேட்போர் கூடத்தில் மாகாண போக்குவரத்து அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் முதித் பிரசன்ன தலைமையில் நடைபெற்றது.

இதன் கீழ் முதற் கட்டமாக அனுராதபுரம் மாவட்டத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் 250 முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இங்கு சுற்றுலாப் பயணிகளின் முன் ஒழுக்கத்தைப் பேணுதல், சட்டம், மொழி , சுகாதாரம் மற்றும் அவர்களின் மனப்பான்மையை வளர்ப்பது தொடர்பில் ஆலோசனை வழங்கப்பட்டது.வடமத்திய மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் மாகாண சுற்றுலா அமைச்சு மாகாண  போக்குவரத்து அதிகார ஆணையத்துடன் இணைந்து இந்த திட்டத்தை  ஏற்பாடு செய்திருந்தது மாகாணத்திற்கு அந்நிய செலாவணிகளைக் கொண்டுவருவதற்கான முக்கிய ஆதாரமாக இருக்கும் இந்த சுற்றுலாத் துறைக்கான சேவைகளை வழங்குவதில் மாகாணத்தில் மிகவும் ஒழுக்கமான சேவைகளை வழங்குகின்ற குழுவை உருவாக்குவதன் மூலம் அதிக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது மற்றொரு நோக்கமாகும்.

இந்த திட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் இந்த தரமான சேவையை வழங்குவதன் மூலம் இந்த இலக்கை அடைய முடியும் . மேலும் வடமத்திய மாகாணத்தில் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதன் மூலம் அந்த துறையில் ஈடுபடுபவர்களின் வருமானம் அதிகரிக்கும் அதன் மூலம் அவர்களின் பொருளாதார நிலை உயர் மட்டத்திற்கு கொண்டு வரப்படும்.

வடமத்திய மாகாணத்தில் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள 1100 முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் கொண்ட குழுவினருக்கு இந்த பயிற்சி அளிக்கப்படும்.இந்த நிகழ்ச்சி திட்டத்தின் வளவாளர்களாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சுற்றுலா விரிவுரையாளர் ஜே.ஏ.பீ.எம்.ஜறசிங்க அனுராதபுரம் பொலிஸ் கோட்ட போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் முகமட் நியாஸ் ஆசிரியர் ஆலோசகர் மாபா பண்டார மற்றும் மாகாண சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் மேம்பாட்டு இயக்குனர் ரீ.எம்.ஜே.திஸாநாக்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *