பிளாஸ்டிக் போத்தல் மூடியால் இருக்கை;களனிப் பல்கலை மாணவர்கள் சாதனை

களனிப் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினர், கொழும்பு – மருதானை ரயில் நிலையம் மற்றும் ரயில் பாதைகளில் காணப்படும் பிளாஸ்டிக் போத்தல் மூடிகளைச் சேகரித்து, அவற்றைப் பயன்படுத்தி, பயணிகள் இருக்கை ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
தனியார் நிறுவனமொன்றின் ஆதரவுடன், மருதானை ரயில் நிலையத்தின் முழுமையான மேற்பார்வையின் கீழ், களனிப் பல்கலை மாணவர்கள் இப்பயணிகள் இருக்கையை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ. காதிர் கான் )
